மக்களுடன் நாம்" செயற்திட்டத்தின் அடிப்படையில் மக்களுடன் சந்திரகாந்தன் சந்திப்பு!!
"மக்களுடன் நாம்" செயற்திட்டத்தின் அடிப்படையில் தமிழ் மக்கள் விடுதலைப் புலிகள் கட்சியின் தலைமைக் காரியாலயத்தில் இன்றைய தினம் கிராமிய வீதிகள் அபிவிருத்தி இராஜாங்க அமைச்சரும், மாவட்ட அபிவிருத்தி குழு தலைவருமான கௌரவ சிவ.சந்திரகாந்தன் அவர்களின் ஆலோசனைக்கு அமைவாக மக்கள் சந்திப்பு இடம்பெற்றது.
இதன்போது காணி, சுயதொழில், பொருளாதாரம் போன்ற பிரச்சனைகள் தீர்க்கப்பட்டதுடன், விளையாட்டு கழகங்கள், கிராம மட்ட அமைப்புக்கள் போன்றவற்றின் தேவைகள் தொடர்பிலும் அவர்கள் எதிர்நோக்கும் சவால்கள் தொடர்பிலும் ஆராயப்பட்டு அவற்றை தீர்த்து வைப்பதற்கான முனைப்பான நடவடிக்கைகளும் எட்டப்பட்டிருந்தது. அத்துடன் இதுவரை காலமும் தீர்க்கப்படாமல் நிலுவையில் இருந்த பிரச்சனைகளும் தீர்க்கப்பட்டிருந்தமை குறிப்பிடத்தக்கது.
குறித்த மக்கள் சந்திப்பில் கட்சியின் முக்கியஸ்தர்கள், பொது அமைப்புக்களின் பிரதிநிதிகள், பொதுமக்கள் என பலரும் கலந்து கொண்டிருந்தனர்.
No comments