மருதமுனையில் மாபெரும் இரத்ததான முகாம்!!
கல்முனை வடக்கு ஆதார வைத்தியசாலையின் வழிகாட்டலின் கீழ் மருதமுனை ஷம்ஸ் 97 சமூக சேவைகள் அமைப்பு ,ஸ்ரீலங்கா தௌஹீத் ஜமாஅத் மருதமுனை கிளையுடன் இணைந்து நடாத்திய மாபெரும் இரத்ததான முகாம் ஷம்ஸ்97 சமூக அமைப்பின் தலைவர் ஐ.ஹுமாயூன் தலைமையில் கமு/ அல்-மதீனா வித்தியாலத்தில் இடம்பெற்றது.
உதிரம் கொடுத்து உயிர் காப்போம் என்பதற்கமைவாக மருதமுனையில் சில வருடங்களாக இயங்கிவரும் ஷம்ஸ்97 சமூக சேவைகள் அமைப்பானது திடீர் விபத்துக்கள்,சத்திர சிகிச்சைகளுக்கான அவரச தேவையினை பூர்த்தி செய்யும் வகையில் கல்முனை ஆதார வைத்தியசாலை இரத்த வங்கியில் நிலவுகின்ற இரத்தப்பற்றாக்குறையை நிவர்த்தி செய்யும் முகமாக இவ் இரத்ததான முகாம் நடாத்தப்பட்டது.
அமைப்பின் செயலாளர் ஏ.எச்.அல் ஜவாஹிர் முதலாவது நபராக இரத்த தானம் செய்தார் என்பது குறிப்பிடத்தக்கதாகும்.
No comments