Vettri

Breaking News

இடியுடன் கூடிய மழை பெய்யும்!!





 வடக்கு, வடமத்திய, கிழக்கு மற்றும் ஊவா மாகாணங்களில் இன்று (19) அவ்வப்போது மழை பெய்யக் கூடும் என வளிமண்டலவியல் திணைக்களம் தெரிவித்துள்ளது.

நாட்டின் ஏனைய பகுதிகளில்,பிற்பகல் 2 மணிக்குப் பின்னர் மழையோ அல்லது இடியுடன் கூடிய மழையோ பெய்யக் கூடும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

மேற்கு, சப்ரகமுவ மற்றும் வடமேற்கு மாகாணங்களில் சில இடங்களில் 75 மில்லிமீற்றருக்கு மேல் பலத்த மழை பெய்யக்கூடும் என்றும் கூறப்படுகிறது.

மேல், சப்ரகமுவ மற்றும் மத்திய மாகாணங்களிலும் காலி மற்றும் மாத்தறை மாவட்டங்களிலும் சில இடங்களில் காலை வேளையில் பனிமூட்டமான நிலை நிலவும் எனவும் வளிமண்டலவியல் திணைக்களம் தெரிவித்துள்ளது.

No comments