Vettri

Breaking News

பாதி தகனம் செய்யப்பட்ட உடல் பிரேத பரிசோதனைக்காக எடுத்துச்செல்லப்பட்டது!





 தகனம் செய்யப்பட்ட ஒரு சடலம் வெளியில் எடுக்கப்பட்டு பிரேத பரிசோதனைக்காக வத்துப்பிட்டிவல வைத்தியசாலைக்கு அனுப்பப்பட்ட சம்பவம் நேற்று இடம்பெற்றுள்ளது.

வேயங்கொட பகுதியைச் சேர்ந்த 81 வயது பெண் மீரிகமவில் உள்ள முதியோர் இல்லத்தில் தங்கியிருந்த நிலையில் நிமோனியா காய்ச்சலால் உயிரிழந்த நிலையில் அவரது உடலை தகனம் செய்ய நடவடிக்கை எடுத்தனர்.

அவர் நோய்வாய்ப்பட்டு மீரிகம ஆதார வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டு நிமோனியா காய்ச்சலால் உயிரிழந்துள்ளதாக வைத்தியர்கள் சான்று படுத்தியுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
எவ்வாறாயினும், அவரது மரணம் குறித்த தகவல்களுக்கு அவரது பாதுகாவலர் எந்த பதிலும் தெரிவிக்காததால், முதியோர் இல்லம் மீரிகம சுடுகாட்டில் சடலத்தை தகனம் செய்ய நடவடிக்கை எடுத்திருந்தது .

இதற்கிடையில், மரணித்தவரின் உறவினர் ஒருவர் மரணத்தில் சந்தேகம் இருப்பதாக கம்பஹா பிரிவின் சிரேஸ்ட பொலிஸ் அத்தியட்சகரிடம் முறைப்பாடு செய்ததையடுத்து, மீரிகம பொலிஸார் விசாரணைகளை ஆரம்பிக்க நடவடிக்கை எடுத்துள்ளனர்.
திடீர் மரணங்கள் தொடர்பான விசாரணையாளர் துசித பிரமோத் விஜயவர்தனவுடன் பொலிஸ் குழுவொன்று தகன அறைக்கு வரவழைக்கப்பட்டு, தகனம் செய்யப்பட்ட சடலத்தை அகற்றி பிரேத பரிசோதனைக்காக வத்துப்பிட்டிவல வைத்தியசாலைக்கு அனுப்பி வைத்தனர்.

மேலதிக விசாரணைகளை மீரிகம பொலிஸ் நிலைய பொறுப்பதிகாரி உபுல் ஹெட்டியாராச்சி மேற்கொண்டு வருகின்றார்.

No comments