செங்கடலில் நெருக்கடி : அதிகரிக்கவுள்ள கோதுமை மாவின் விலை
இஸ்ரேல் - காசா மோதல் காரணமாக செங்கடலில் ஏற்பட்டுள்ள நெருக்கடி காரணமாக இலங்கையில் கோதுமை மாவின் விலை எதிர்காலத்தில் பாதிக்கப்படலாம் என அத்தியாவசிய உணவுப் பொருட்கள் இறக்குமதியாளர் சங்கம் தெரிவித்துள்ளது.
இந்த நாட்டுக்கு துருக்கியில் இருந்து கோதுமை மா இறக்குமதி செய்யப்படுவதாக சங்கத்தின் பேச்சாளர் ஒருவர் தெரிவித்தார்.
இதேவேளை துருக்கியில் இருந்து இறக்குமதி செய்யப்படும் கோதுமை மா செங்கடல் வழியாக செல்லும் கப்பல்களில் இருந்து வருகிறது என்றும் அவர் மேலும் குறிப்பிட்டார்.
செங்கடல் வழியாகப் பயணித்தல்
அதன்படி, அந்த கப்பல்கள் செங்கடல் வழியாக பயணிக்க தடைகள் இருப்பதால், கூடுதல் கப்பல் கட்டணம் வசூலித்தால், கோதுமை மாவின் விலை உயரலாம் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
எவ்வாறாயினும், நாட்டில் இன்னும் 03 மாதங்களுக்கு போதுமான கோதுமை மா மற்றும் இறக்குமதி செய்யப்பட்ட சோள கையிருப்பு இருப்பதாக அத்தியாவசிய இறக்குமதியாளர்கள் சங்கம் மேலும் தெரிவித்துள்ளது.
இந்நிலையில் கோதுமை மாவுக்கான விலையினை அதிகரிக்கப்போவதில்லை என இலங்கையின் மாவு தேவைகளைப் பூர்த்தி செய்யும் முக்கிய நிறுவனங்கள் தெரிவித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.
No comments