மின்னேற்றி குறித்து ஐரோப்பிய ஒன்றியம் அறிமுகப்படுத்தியுள்ள புதிய விதி
ஐரோப்பிய ஒன்றியத்தில் விற்பனை செய்யப்படும் கையடக்கத் தொலைபேசிகள்,புகைப்படக் கருவிகள் என பல்வேறு இலத்திரனியல் உபகரணங்களை பொதுவான ஒரு பொதுவான முன்னேற்றும் போர்ட் அறிமுகப்படுத்தப்படவுள்ளதாக ஐரோப்பிய நாடாளுமன்றம் அறிவித்துள்ளது.
குறித்த அறிவிப்பின் படி புதிய போர்ட் ஆனது இந்த ஆண்டு (2024) டிசம்பர் மாதம் 28 ஆம் திகதி முதல் நடைமுறைக்கு வரும் எனவும் ஐரோப்பிய நாடாளுமன்றம் அறிவித்துள்ளது.
இது தொடர்பாக மேலும் தெரியவருவதாவது,
மின்னணு கழிவுகளைக் குறைத்தல்
"இந்த ஆண்டின் (2024) டிசம்பர் மாதம் முதல் நடைமுறைக்கு வரும் வகையில் USB Type-C ரக முன்னேற்றும் போர்ட் அறிமுகப்படுத்தப்படவுள்ளது.
பொதுமக்களின் வசதிக்காகவும், சுற்றுச்சூழலை மேம்படுத்துவதற்காகவும் இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக கூறப்பட்டுள்ளது.
கடந்த 2022 ஆம் ஆண்டு ஒக்டோபர் இல் வெளியிடப்பட்ட அறிக்கையொன்றில், ஐரோப்பிய நாடாளுமன்றம் முதன்முதலில் 2024 ஆம் ஆண்டின் இறுதிக்குள், ஐரோப்பிய ஒன்றியத்தில் விற்கப்படும் அனைத்து கையடக்கத்தொலைபேசிகள், டப்லெட்டுகள் (Tablets) மற்றும் புகைப்படக்கருவி போன்றவற்றில் USB Type-C மின்னேற்றும் போர்ட் பொருத்தப்பட்டிருக்க வேண்டும் என்றும்,
இது 2026 ஆம் ஆண்திற்குள் மடிக்கணினிகள் வரை நீட்டிக்கப்பட வேண்டும் எனவும் முன்மொழியப்பட்டிருந்தது.
இந்த முன்மொழிவுக்கு ஆதரவாக 602 வாக்குகளும், எதிராக 13 வாக்குகளும்,8 பேர் வாக்களிக்காமலும் இருந்துள்ளனர்.
2022 ஆம் ஆண்டில் நிறைவேற்றப்பட்ட புதிய சட்டமான, மின்னணு கழிவுகளைக் குறைப்பது, மேலும் நிலையான தேர்வுகளைச் செய்வதற்கு நுகர்வோருக்கு அதிகாரம் அளிப்பது போன்ற பரந்த ஐரோப்பிய ஒன்றிய முயற்சியின் ஒரு பகுதியாக இந்த திட்டம் விலங்குவாதாக ஐரோப்பிய ஒன்றியம் விளக்கமளித்துள்ளது.
ஒரே மின்னேற்றி
மேலும் அறிமுகப்படுத்தப்பட்டுள்ள இந்த புதிய விதிகளின்படி, நுகர்வோர் ஒவ்வொரு முறையும் புதிய சாதனத்தை வாங்கும்போது வேறுவேறு மின்னேற்றிகளை வாங்க வேண்டிய தேவை இல்லாது போகும்,
ஏனெனில் அவர்கள் சிறிய மற்றும் நடுத்தர அளவிலான சிறிய மின்னணு சாதனங்களின் முழு அளவிலான ஒரே மின்னேற்றியையே எல்லாவற்றிற்கும் பயன்படுத்த முடியும் என்பதனாலாகும்.
மேலும், அனைத்து புதிய கையடக்கத்தொலைபேசிகள், டப்லெட்டுகள் (Tablets), டிஜிட்டல் புகைப்படக்கருவிகள், நுணுக்குப்பண்ணிகள், கையடக்க காணொளி விளையாட்டுக்கருவிகள் மற்றும் ஒலிபெருக்கிகள், விசைப்பலகையில், சுட்டிகள், மடிக்கணினிகள் என அனைத்து கருவிகளுக்கும் 100 வாட்ஸ் வரை மின்சார விநியோகத்துடன், USB Type-C போர்ட் பொருத்தப்பட்டிருக்க வேண்டும் எனவும் நாடாளுமன்றம் சுட்டிக்காட்டியுள்ளது.
தவிரவும் வேகமான மின்னேற்றுவதை ஆதரிக்கும் அனைத்து சாதனங்களும் இப்போது ஒரே மின்னேற்றும் வேகத்தைக் கொண்டிருப்பதால், பயனர்கள் தங்கள் சாதனங்களை எந்த இணக்கமான USB Type-C மின்னேற்றி மூலம் அதே வேகத்தில் மின்னேற்ற முடியும் என கூறப்படுகின்றமை குறிப்பிடத்தக்கது.
No comments