Vettri

Breaking News

மின்சாரம், பெட்ரோலியம் உள்ளிட்ட பல சேவைகள் அத்தியாவசிய சேவைகளாக அறிவிக்கப்பட்டுள்ளது!!




 பல சேவைகளை அத்தியாவசிய சேவைகளாக பிரகடனப்படுத்தி அதிவிசேட வர்த்தமானி  வெளியிடப்பட்டுள்ளது. ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்கவின் பணிப்புரைக்கு அமைய வர்த்தமானி வெளியிடப்பட்டுள்ளது. வர்த்தமானியின் பிரகாரம், அத்தியாவசிய சேவைகளாக அறிவிக்கப்பட்டுள்ள சேவைகள் பின்வருமாறு,

1. மின்சார விநியோகம் தொடர்பான அனைத்து சேவைகள்

2. பெட்ரோலிய பொருட்கள் மற்றும் எரிபொருள் வழங்கல் மற்றும் விநியோகம்

3. ஒரு துறைமுகத்திற்குள் பிரவேசிக்கும் கப்பல்களில் இருந்து உணவு அல்லது பானம், எண்ணெய் அல்லது எரிபொருட்களை கொண்டு செல்லல், இறக்குதல், களஞ்சியபபடுத்தல், ஒப்படைத்தல் மற்றும் வெளியேற்றல் தொடர்பான சேவைகள் 

4. விமான நிலையங்கள், துறைமுகங்கள் உள்ளிட்ட விமான போக்குவரத்து சேவைகளை வழங்குதல் மற்றும் பராமரித்தல்       தொடர்பான சேவைகள் 

No comments