அம்பாறையில் கனமழை-போக்குவரத்து மேற்கொள்வதில் பிரதேச மக்கள் சிரமம்!!
அம்பாறை மாவட்டத்தில் பெய்து வரும் அடைமழை காரணமாக பொதுமக்களின் இயல்பு வாழ்க்கை பாதிக்கப்பட்டுள்ளது.
இதனால் மாவட்டத்தின் கரையோர பிரதேசங்களான நாவிதன்வெளி, நற்பிட்டிமுனை, ஆலையடிவேம்பு, அட்டாளைச்சேனை, நிந்தவூர், காரைதீவு, பாண்டிருப்பு, மருதமுனை, பெரியநீலாவணை, துறைவந்தியமேடு போன்ற தாழ்நில பகுதிகளில் வெள்ள நீர் பெருக ஆரம்பித்துள்ளன.
தொடர்ச்சியாக கன மழை பெய்வதால் மீனவர்கள் கடலுக்கு செல்ல முடியாத நிலை ஏற்பட்டுள்ளதுடன் நாளாந்த கூலி வேலைகளில் ஈடுபடும் தொழிலாளர்கள் பாதிக்கப்பட்டுள்ளதோடு தாழ் நிலப் பகுதிகளில் வெள்ள நீர் தேங்கியிருப்பதால் டெங்கு நோய் பெருகக்கூடிய அபாயமும் ஏற்பட்டுள்ளன.
No comments