Vettri

Breaking News

களனி பல்கலைக்கழகத்தின் நிர்வாகக் கட்டிடம் மாணவர்களால் முற்றுகை!!





 களனி பல்கலைக்கழகத்தில் சுமார் 350 மாணவர்கள் அடங்கிய குழுவினர் நிர்வாக கட்டிடத்தை முற்றுகையிட்டுள்ளதுடன் உள்ளே நுழைந்து எதிர்ப்பு நடவடிக்கையில் ஈடுபட்டுள்ளனர்.

ஜனாதிபதி ரணில்  விக்ரமசிங்க களனி பல்கலைக்கழகத்திற்கு விஜயம் மேற்கொள்வதற்கு எதிர்ப்பு தெரிவித்தே குறித்த ஆர்ப்பாட்டம் நேற்றிரவு மேற்கொள்ளப்பட்டது.

இவேதவேளை, நேற்றிரவு (29) கொழும்பு-கண்டி வீதியை மறித்து மாணவர்கள் போராட்டம் நடத்தியிருந்த நிலையில், அவர்களை கலைக்க பொலிஸார் கண்ணீர் புகை மற்றும் நீர்த்தாரை பிரயோகம் மேற்கொண்டுள்ளனர்.

இந்த போராட்டம் காரணமாக களனி பல்கலைக்கழகத்திற்கு முன்பாக கொழும்பில் இருந்து கண்டி செல்லும் பிரதான வீதி முற்றாக தடைப்பட்டிருந்தமை குறிப்பிடத்தக்கது.

No comments