சம்பந்தன் தலைமையில் கசப்பான அனுபவங்களை எதிர்கொண்டோம்: சித்தார்த்தன் !!
சம்பந்தன் தலைவராக இருந்த போதும் கசப்பான அனுபவங்களை எதிர்கொண்டுள்ளதாக நாடாளுமன்ற உறுப்பினர் தர்மலிங்கம் சித்தார்த்தன் தெரிவித்துள்ளார்.
யாழ்ப்பாணத்தில் நேற்று (29.01.2024) இடம்பெற்ற ஊடக சந்திப்பில் கலந்துக்கொண்டு கருத்து தெரிவிக்கும் போதே மேற்கண்டவாறு குறிப்பிட்டுள்ளார்.
இது தொடர்பாக மேலும் தெரிவிக்கையில், “தமிழ்த் தேசிய கட்சிகள் ஒரு கூட்டமைப்பாக பதிவு செய்யப்படுவதோடு அதற்கு ஒரு பொதுவான சின்னமும் பதிவு செய்யப்பட வேண்டும்.
நான் மட்டுமில்லாது ஜனநாயக தமிழ் கட்சிகள் அனைத்துமே இந்த நிலைப்பாட்டில் தான் உள்ளது” என தெரிவித்துள்ளார்.
No comments