சட்டவிரோத மதுபானம் அருந்திய ஆட்டோ சாரதி சடலமாக மீட்பு
நண்பனுடன் இணைந்து சட்டவிரோத மதுபானத்தை அருந்திய முச்சக்கர வண்டி சாரதி ஒருவர் சந்தேகத்திற்கிடமான முறையில் உயிரிழந்துள்ளதாக பண்டாரகமை பொலிஸார் தெரிவித்தள்ளனர்.
உயிரிழந்தவர் ஹல்தொட்ட பிரதேசத்தை சேர்ந்த இஷான் புஷ்பகுமார என்ற 45 வயதுடைய ஒரு பிள்ளையின் தந்தையாவார்.
இவர் பண்டாரகமை பிரதேசத்தில் புதிதாக வீடொன்றை நிர்மாணித்துவரும் நிலையில் குறித்த வீட்டுக்கு அருகில் காணப்படும் சிறிய பந்தல் ஒன்றுக்கு அருகில் சடலமாக மீட்கப்பட்டுள்ளார்.
இவரது மனைவி இவரது தொலைபேசிக்கு அழைப்பு விடுத்தும் கணவர் பதிலளிக்காததால் வீட்டுக்கு அருகிலுள்ள இளைஞரொருவரிடம் கணவர் குறித்து தேடி பார்க்குமாறு தெரிவித்துள்ளார்.
இந்நிலையில் குறித்த இளைஞர் உயிரிழந்த நபரை தேடியும் அவர் தொடர்பில் தகவல் கிடைக்காததால் உயிரிழந்தவரது மனைவி இது தொடர்பில் பொலிஸில் முறைப்பாடு வழங்கியுள்ளார்.
இதனையடுத்து பொலிஸாரால் மேற்கொள்ளப்பட்ட விசாரணையில் உயிரிழந்தவர் சடலமாக மீட்கப்பட்டுள்ளதுடன் சடலத்திற்கு அருகிலிருந்து 500 மில்லி லீட்டர் நிறையுடைய சட்டவிரோத மதுபான போத்தல் ஒன்றும் பொலிஸாரால் கைப்பற்றப்பட்டுள்ளது.
இது தொடர்பில் உயிரிழந்த நபருடன் சேர்ந்து மது அருந்தியதாக கூறப்படும் அவரது நண்பரிடம் விசாரணைகளை நடத்தி வாக்குமூலம் பெற்றுள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.
இந்த சம்பவம் தொடர்பான மேலதிக விசாரணைகளை பாணந்துறை குற்றப் புலனாய்வுப் பிரிவினர் மேற்கொண்டு வருகின்றனர்.
No comments