பொங்கல் விழாவில் உழவர்கள் கௌரவிப்பு!!
பொங்கல் விழாவில் உழவர்கள் கௌரவிக்கப்பட்டனர்.
(செய்தியாளர்) 18.01.2024
மன்னார் மாவட்ட செயலக அலவலர்கள் ஏற்பாட்டில் மன்னார் மாவட்ட செயலகத்தில் சூரியப்பொங்களும் உழவர் கௌரவிப்பும் புதன் கிழமை (17) மன்னார் மாவட்ட செயலகத்தில் மன்னார் மாவட்ட செயலாளர் திரு க.கணகேஸ்வரன் தலைமையில் நடைபெற்றது.
இந்நிகழ்வில் மன்னார் மாவட்ட ஐந்து பிரதேச செயலகங்களிலிருந்து தெரிவு செய்யப்பட்ட ஐந்து திறமைமிக்க உழவர்கள் கௌரவிக்கப்பட்டனர்.
முசலி; பிரதேச செயலகப் பிரிவிலிருந்து முகம்மது மஸ்தான் அப்துல் றகீம்
மாந்தை மேற்கு பிரதேச செயலகப் பிரிவிலிருந்து டேவிட் டபரேரா,
மடு பிரதேச செயலகப் பிரிவிலிருந்து ஆறுமுகம் கணேசமூர்த்தி
மன்னார் பிரதேச செயலகப் பிரிவிலிருந்து புதுக்கமத்தைச் சேர்ந்த மரிஷால் ஜெயதாஸ்
நானாட்டான் பிரதேச செயலகப் பிரிவிலிருந்து செபமாலை லோறன்ஸ் பீரீஸ் ஆகியோர் கௌரவிக்கப்பட்டு பணப் பரிசும் வழங்கப்பட்டது.
சூரிய பொங்கலைத் தொடர்ந்து உழவர் கௌரவிப்பு , மன்னார் பனங்கட்டு கொட்டு பரதக் கலாலய நாட்டியப் பள்ளி மாணவிகளின் நடனம் மற்றும் 'சமூக வலைத்தளங்கள் இளைஞர்களுக்கு வரம்' என்று ஒரு குழுவினரும் , 'இல்லை இது சாபம்' என்று இன்னொரு குழுவினரும் எடுத்துரைத்த பட்டி மன்றமும் இங்கு இடம்பெற்றது.
No comments