Vettri

Breaking News

ஒருநாள் கிரிக்கெட்டில் வருடத்தின் முதல் சதத்தைக் குவித்தார் அசலன்க : ஆட்டம் மழையால் தடைப்பட்டுள்ளது !





 ஸிம்பாப்வே அணிக்கு எதிராக ஆர். பிரேமதாச சர்வதேச கிரிக்கெட் விளையாட்டரங்கில் நடைபெற்றுவரும் முதலாவது சர்வதேச ஒருநாள் கிரிக்கெட் போட்டியில் சரித் அசலன்க குவித்த அபார சதத்தின் உதவியுடன் இலங்கை 50 ஓவர்களில் 9 விக்கெட்களை இழந்து 273 ஓட்டங்களைக் குவித்தது.

சர்வதேச ஒருநாள் கிரிக்கெட் போட்டிகளில் இந்த வருடம் சதம் குவித்த முதலாவது வீரர் என்ற பெருமையை சரித் அசலன்க பெற்றுக்கொண்டார்.

22ஆவது ஓவரில் மொத்த எண்ணிக்கை 125 ஓட்டங்களாக இருந்தபோது அணித் தலைவர் குசல் மெண்டிஸ் 46 ஓட்டங்களுடன் ஆட்டம் இழந்தார்.

அப்போது 13 ஓட்டங்களைப் பெற்றிருந்த சரித் அசலன்க, அதன் பின்னர் மத்திய மற்றும் பின்வரிசை வீரர்களுடன் இணைந்து இலங்கைக்கு 144 ஓட்டங்களைப் பெற்றுக்கொடுத்து கடைசி ஓவரில் 9ஆவதாக ஆட்டம் இழந்தார்.

மிகவும் திறமையாகத் துடுப்பெடுத்தாடிய சரித் அசலன்க 95 பந்துகளை எதிர்கொண்டு 5 பவுண்டறிகள், 4 சிக்ஸ்களுடன் 101 ஓட்டங்ளைப் பெற்றார்.

18 ஓட்டங்களைப் பெற்ற துஷ்மன்த சமீரவுடன் 8ஆவது விக்கெட்டில் 52 ஓட்டங்க்ளை அசலன்க பகிர்ந்தார்.

இப் போட்டியில் இலங்கையின் ஆரம்பம் சிறப்பாக அமையவில்லை. அணிக்கு மீள அழைக்கப்பட்ட அவிஷ்க பெர்னாண்டோ முதல் ஓவரிலேயே ஓட்டம் பெறாமல் ஆட்டம் இழந்தார்.

எனினும் 41 ஓட்டங்ளைப் பெற்ற சதீர சமரவிக்ரமவுடன் 2ஆவது விக்கெட்டில் 63 ஓட்டங்களையும் 24 ஓட்டங்களைப் பெற்ற ஜனித் லியனகேவுடன் 3ஆவது விக்கெட்டில் 48 ஓட்டங்களையும் குசல் மெண்டிஸ் அணியை சுமாரான நல்ல நிலையில் இட்டார். குசல் மெண்டிஸ் 46 ஓட்டங்களுடன் துரதிர்ஷ்டவசமாக ரன் அவுட் ஆனார்.

ஸிம்பாப்வே பந்துவீச்சில் ரிச்சர்ட் ங்கரவா, ப்ளெசிங் முஸராபனி, பராஸ் அக்ரம் ஆகியோர் தலா 2 விக்கெட்களைக் கைப்பற்றினர்.

274 ஓட்டங்களை வெற்றி இலக்காகக் கொண்டு ஸிம்பாப்வே 4 ஓவர்களில் 2 விக்கெட்டுகளை இழந்து 12 ஓட்டங்களைப்பெற்று பதிலுக்கு துடுப்பெடுத்தாடிக்கொண்டிருக்கும் போது ஆட்டம் மழையால் தடைப்பட்டுள்ளது.

No comments