நடிகர் அஜித்தின் உண்மை முகம் இதுதான்.. ரசிகர்களுக்கு கூட இதுதான் லிமிட்.. உண்மையை கூறிய நபர்
நடிகர் அஜித்
தமிழ் சினிமாவில் முன்னணி நட்சத்திரமாக இருக்கும் அஜித் எந்த ஒரு நிகழ்விற்கும் வருவதில்லை. ஏன் தனது படத்தின் ப்ரோமோஷனுக்கு கூட அவர் வருவதில்லை என பல குற்றச்சாட்டுகள் கூறி வருகிறார்கள்.
இந்நிலையில், இதுகுறித்து நபர் ஒருவரிடம் அஜித் பேசி இருக்கிறார். அந்த அனுபவத்தை அந்த நபர் பகிர்ந்துகொண்டுள்ளார். விமானத்தில் அந்த நபர் அஜித்தை சந்தித்தபோது ஏன் Interview, நிகழ்ச்சிகளில் எல்லாம் கலந்து கொள்வதில்லை என கேட்டுள்ளார்.
உண்மை இதுதான், அஜித் கூறிய விளக்கம்
இதற்கு பதிலளித்த அஜித் 'ரசிகனாக இருக்கலாம் ரசிகனாக மட்டுமே இருக்க கூடாது என நான் நினைக்கிறன். என் படம் வெளிவருகிறது என்றால் அதற்க்கு சில நாட்களுக்கு முன்பே கொண்டாட்டங்களை ஆரம்பித்து விடுகிறார்கள். அது எனக்கு மிகவும் அதிகமாக இருப்பதாக உணருகிறேன்'.'அப்போது அவர்களுடைய நேரத்தை என்னுடைய படத்திற்காக செலவு செய்கிறார்கள். இதுவே ஒரு நிகழ்ச்சியில் பங்கேற்கிறேன் என்றால், அந்த நிகழ்ச்சிக்காக அவர்களுடைய நேரத்தை ஒதுக்குகிறார்கள். அப்படி செய்யக்கூடாது. நான் நடிக்கிறேன், நான் சம்பாதிக்கிறேன், எனது குடும்பத்தை பார்த்து கொள்கிறேன்'.
'அதே போல் தான் அவர்களும் குடும்பத்தை முதலில் பார்க்க வேண்டும். என்னை ஒரு நடிகராக மட்டுமே பாருங்க, ஒரு ரோல் மாடலாக என் ரசிகன் என்னை பார்க்க வேண்டாம்' என கூறியுள்ளார். இதுவே அவர் எந்த நிகழ்ச்சியிலும் பங்கேற்றுக் கொள்ளாததற்கு காரணமாம்.
No comments