சுதந்திர தின ஒத்திகையின் போதுபராசூட் வீரர் இருவர் கட்டிடத்தின் மீது வீழ்ந்து விபத்து!!
காலி முகத்திடலில் இடம்பெற்றுவரும் சுதந்திர தின ஒத்திகையின் போது பராசூட்கள் சரியாக விரியாததால் 4 பராசூட் வீரர்கள் கீழே விழுந்து காயமடைந்துள்ளனர்.
இந்தச் சம்பவம் இன்று செவ்வாய்க்கிழமை (30) காலை இடம்பெற்றுள்ளது.
பராசூட் வீரர் இருவர் கீழே வீழந்து காயமடைந்ததுடன் மேலும் இருவர் கட்டிடத்தின் மீது வீழ்ந்துள்ளனர்.
இராணுவப் பேச்சாளர் மேஜர் ஜெனரல் கே.ஏ.என். ரசிக குமார இது தொடர்பில் தெரிவிக்கையில்,
இந்தச் சம்பவத்தில் காயடமடைந்த வீரர்கள் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாகவும், இதில் இரு வீரர்கள் இலங்கை விமானப்படையைச் சேர்ந்தவர்கள் எனவும், ஏனைய இருவரும் இலங்கை இராணுவத்தைச் சேர்ந்தவர்கள் எனவும் தெரிவித்தார்.
No comments