Vettri

Breaking News

வெள்ளமயமான கிழக்கு : மக்களின் காலடிக்கு உதவியுடன் களமிறங்கிய கிழக்கின் கேடயம்!!











நூருல் ஹுதா உமர் 


நாட்டில் தொடர்ச்சியாக பெய்துவரும் அடைமழை மற்றும் சீரற்ற காலநிலை காரணமாக பாதிப்புற்ற அம்பாரை மாவட்ட தமிழ் முஸ்லிம் மக்கள் வாழும் பகுதிகளுக்கு நேரில் சென்று அவர்களின் நிலைகளை பார்வையிற்று மக்களின் உடனடி தேவைகளை கண்டறிந்து உதவி செய்யும் பணியை கிழக்கின் கேடயம் பிரதானி எஸ்.எம். சபீஸ் முன்னெடுத்து வருகிறார். 


தொடர் மழை காரணமாக அம்பாறை மாவட்டத்தின் அனைத்து குளங்களின் வான்கதவுகள் திறக்கப்பட்டுள்ளதோடு அடை மழையும் விடாது பெய்து வருகின்றது இதனால் எல்லா இடங்களும் வெள்ளமயமாக காட்சியளிக்கிறது. 

 

இந்நேரத்தில் தொடர்ச்சியாக மக்களை நேரில் சென்று பார்வையிட்டு அவர்களுக்கு தேவையான உதவிகளை கிழக்கின் கேடயத்தின் தொண்டர்கள் மற்றும் நிர்வாகிகள் கடந்த வாரம் முதல் தீவிரமாக செய்து வருகின்றனர். 


இன்றும் தின தொழிலில் ஈடுபடும் அம்பாரை மாவட்ட பல்வேறு பிரதேசங்களையும் சேர்ந்த தமிழ் முஸ்லிம் குடும்பங்களை நேரில் சென்று பார்வையிட்டு அவர்களுக்கான உதவிகளை முடியுமான வகையில் அக்கரைப்பற்று அனைத்து பள்ளிவாசல்களின் முன்னாள் தலைவரும், கிழக்கின் கேடயத்தின் பிரதானியுமான எஸ். எம் சபீஸ் செய்திருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.

No comments