Vettri

Breaking News

முச்சக்கர வண்டியில் ஏறிய பெண் : சினிமா பாணியில் செய்த அதிர்ச்சி செயல்





 இரத்தினபுரி - கொடகவெல பகுதியில் பயணம் செய்ய வேண்டும் என கூறி முச்சக்கர வண்டியில் ஏறிய பெண், சாரதியை கொலை செய்துவிட்டு முச்சக்கர வண்டியை கொள்ளையடிக்க முயற்சித்த சம்பவமொன்று இடம்பெற்றுள்ளதாக காவல்துறையினர் தெரிவித்துள்ளனர்.

முச்சக்கரவண்டி சாரதியின் கழுத்தில் துணியால் கட்டி அழுத்தியதுடன், முகத்தை மூடிக்கொண்டு கொள்ளையடிக்க முயன்ற குற்றச்சாட்டில் குறித்த பெண் காவல்துறையினரால் கைது செய்யப்பட்டுள்ளார்.

கொடகவெல நகரில் இருந்து முச்சக்கரவண்டியில் ஏறிக்கொண்ட யுவதி, கொடகவெல ரன்வல வீதியில் இரண்டு கிலோமீற்றர் பயணித்த போது முச்சக்கரவண்டி சாரதியின் பின் இருக்கையில் இருந்து முன் இருக்கை வரை கழுத்தில் துணியால் அழுத்தப்பட்டதாக சாரதி காவல்துறையினரிடம் தெரிவித்துள்ளார்.

அப்போது முச்சக்கரவண்டியை கட்டுப்படுத்த முடியாமல் வீதியில் பயணித்த மோட்டார் சைக்கிள் மீது மோதியதில் முச்சக்கரவண்டி வீதியை விட்டு விலகி நின்றுள்ளது, அங்கு வந்த கிராம மக்கள் சந்தேகமடைந்த பெண்ணை பிடித்து காவல்துறையினரிடம் ஒப்படைத்துள்ளனர்.

No comments