வீட்டின் சுவர் இடிந்து வீழ்ந்ததில் இளம் தாய் பலி!!
ஹிகுரக்கொட - மின்னேரியா பிரதேசத்தில் வீடொன்றின் சுவர் இடிந்து வீழ்ந்ததில் 23 வயதுடைய இளம் தாயொருவர் உயிரிழந்துள்ளார்.
இந்த சம்பவத்தில் அவரது கணவர் மற்றும் ஒன்றரை வயது குழந்தையும் காயமடைந்த நிலையில், பொலன்னறுவை வைத்தியசாலையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளனர்.
தொடர்ந்து பெய்து வரும் கன மழை காரணமாக குறித்த வீட்டின் சுவர் இடிந்து வீழ்ந்துள்ளதாக விசாரணைகளில் தெரியவந்துள்ளது.
No comments