Vettri

Breaking News

கிழக்கின் கேடயத்தின் அயலவர்களுக்கு உதவுவோம்" நிவாரணம் மூன்றாம் கட்டம் வழங்கி வைப்பு !!










நூருல் ஹுதா உமர் 


நாட்டில் தற்போது ஏற்பட்டுள்ள கன மழை காரணமாக பல குடும்பங்கள் பெரிதும் பாதிக்கப்பட்டுள்ளது. அவர்களுக்கு உதவும் வகையில் அம்பாறை மாவட்ட பல்வேறு பிரதேசங்களையும் சேர்ந்த குடும்பங்களுக்கு "அயலவர்களுக்கு உதவுவோம் மூன்றாம் கட்டம்" திட்டத்தின் கீழ் அரிசி பொதிகள் கிழக்கின் கேடயத்தின் நிர்வாகிகள் மற்றும் தொண்டர்கள் மூலம் இன்று வழங்கி வைக்கப்பட்டது. 


கிழக்கின் கேடயத்தின் தலைவர் எஸ்.எம்.சபீஸ் அவர்களின் சொந்தநிதியிலிருந்து கொள்வனவு செய்யப்பட்டு அம்பாறை மாவட்டத்தில் பெய்துவரும் தொடர்ச்சியான மழை காரணமாக பாதிக்கப்பட்டு வறுமைக் கோட்டிற்கு கீழ் வாழும் குடும்பங்கள், தொழில் பாதிக்கப்பட்டு மிகவும் கஷ்டப்பட்டுக் கொண்டிருக்கின்ற குடும்பங்கள், வெள்ளத்தினால் பாதிக்கப்பட்டு இருப்பிடங்களை இழந்தவர்களுக்கு இந்த பொதிகள் வழங்கி வைக்கப்பட்டது. 


கடந்த கொரோனா தொற்று காலத்திலும் ஜனாஸா நல்லடக்கம், நிவாரணப்பணி, என பல்வேறு வேலைத்திட்டங்களை முன்னெடுத்த கிழக்கின் கேடயம் அமைப்பு அம்பாறை மாவட்டத்தை சேர்ந்த 1000 குடும்பங்களுக்கான உலருணவு பொதிகளை கொரோனா தொற்று காலத்திலும் வழங்கியிருந்தமை குறிப்பிடத்தக்கது. 


அம்பாறை மாவட்டத்தில் பாதிக்கப்பட்ட குடும்பங்களுக்கு கிழக்கின் கேடயத்தின் தன்னார்வ தொண்டர்கள் அரிசிப் பொதிகளை கொட்டும் மழையில் அடையாளம் காணப்பட்டவர்களிடம் பகிர்தளித்து வருகின்றமை குறிப்பிடத்தக்கத்து.

No comments