Vettri

Breaking News

கதிரை சின்னத்தில் புதிய கூட்டணி - மைத்திரிபால சிறிசேன !!





 பொதுஜன ஐக்கிய முன்னணி தலைமையில் எதிர்காலத்தில் கதிரை சின்னத்தில் புதிய கூட்டணி ஒன்று அமையவுள்ளதாக முன்னாள் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன தெரிவித்துள்ளார்.

சுதந்திர கட்சியின் தலைமையகத்தில் நேற்று இடம்பெற்ற ஐக்கிய மக்கள் முன்னணியின் நிறைவேற்று குழுகூட்டத்தில் கலந்துகொண்டு அவர் இந்த விடயத்தை குறிப்பிட்டுள்ளார்.

எதிர்வரும் நாட்களில் கட்சியின் யாப்பை திருத்தம் செய்ததன் பின்னர், நிறைவேற்றுக்குழுவுக்கு புதிய தலைவர்கள் தெரிவு செய்யப்படுவார்கள்.

அத்துடன், இந்த கூட்டணியில் பலர் இணைந்துக்கொள்ள விருப்பம் தெரிவித்துள்ளதாகவும் அவர் மேலும் தெரிவித்துள்ளார்.

No comments