ஐக்கிய சமாதானக் கூட்டமைப்பின் கொழும்புச் செயற்குழுக் கூட்டம்!!!
நூருல் ஹுதா உமர்
ஐக்கிய சமாதானக் கூட்டமைப்பின் கொழும்புச் செயற்குழுக் கூட்டம் 2024 ஜனவரி 14 அன்று கொழும்பு 7, தேசிய நூலகம் மற்றும் ஆவணச் சேவைகள் சபை கேட்போர் கூடத்தில் கட்சியின் பொருளாளரும், ஸ்தாபகரும், கொழும்பு மாநகர சபை முன்னாள் உறுப்பினருமான ஐ.ஏ. கலீலுரஹ்மான் தலைமையில் நடைபெற்றது.
இந்த கூட்டத்தில் அதிதி பேச்சாளர்களாக ஏ.டவலியு.எம். அஸீஸ், ஹாஃபில் கையும் ஆகியோர் கலந்து கொண்டு அரசியல் போக்குகள், இலங்கை அரசியலின் எதிர்காலம், தேர்தல்கள் தொடர்பில் கருத்துரைத்தனர்.
ஐக்கிய சமாதானக் கூட்டமைப்பின் கொழும்பு மாநகர சபை முன்னாள் உறுப்பினர்களான எம்.பீ.எம் காதர், எஸ்.எம். முஸம்மில் ஆகியோர் உட்பட முக்கியஸ்தர்கள் பலரும் இந்த கொழும்புச் செயற்குழுக் கூட்டத்தில் கலந்து கொண்டனர்.
No comments