மின்சாரக் கட்டண திருத்தம் தொடர்பில் வெளியான விசேட தகவல்
மின்சாரக் கட்டண திருத்தம் தொடர்பான முன்மொழிவொன்று தனது ஆணைக்குழுவின் ஒப்புதலுக்காக சமர்ப்பிக்கப்பட்டுள்ளதாக வெளியான தகவல் பொய்யானது என பொதுப் பயன்பாடுகள் ஆணைக்குழு தெரிவித்துள்ளது.
குறித்த தகவலை அறிக்கை ஒன்றை வெளியிட்டதன் மூலும் பொதுப் பயன்பாடுகள் ஆணைக்குழு அறிவித்துள்ளது.
இலங்கை மின்சார சபை இவ்வாறான முன்மொழிவொன்றை இலங்கை பொதுப் பயன்பாடுகள் ஆணைக்குழுவிடம் கையளித்துள்ளதாக சில ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.
முன்மொழிவு
எனினும், அவ்வாறான முன்மொழிவு ஆணைக்குழுவிற்கு இன்று (08) வரை கிடைக்கவில்லை எனவும் அந்த அறிவிப்பில் குறிப்பிடப்பட்டுள்ளது.
No comments