கமல்ஹாசன் படத்தில் இருந்து விலகினாரா முக்கிய பட இயக்குனர்- முழு விவரம்
கமல்ஹாசன்
தமிழ் சினிமாவின் முன்னணி நடிகர்களான ரஜினி, கமல், விஜய், அஜித் ஆகியோரின் படங்களை தற்போது உள்ள இளம் இயக்குனர்கள் தான் மாறி மாறி இயக்கி வருகிறார்கள்.
இளம் இயக்குனர்களும் தங்களுக்கு கிடைத்த பெரிய வாய்ப்பை தங்களது வாழ்நாள் வாய்ப்பாக நல்ல கதை கொண்டு இயக்கி வருகிறார்கள்.அப்படி சதுரங்க வேட்டை, தீரன் அதிகாரம் ஒன்று, நேர்கொண்ட பார்வை, வலிமை, துணிவு ஆகிய படங்களை இயக்கியவர் எச்.வினோத்.
இவர் கமல்ஹாசனை வைத்து புதிய படம் இயக்க இருப்பதாக கூறப்பட்டது, ஆனால் அப்படம் குறித்து ஒரு தகவல் வந்துள்ளது.
இயக்குனர் விலகலா
ராஜ்கமல் பிலிம்ஸ் இன்டர்நேஷ்னல் தயாரிக்க கமல் நடிக்க எச்.வினோத் படத்தை இயக்குவதாக புதிய பட அறிவிப்பு வந்தது.
வினோத் போலீஸ் கதை ஒன்றைக் கமலுக்குச் சொன்னதாகவம் அதுபோன்ற கதையில் மீண்டும் நடிக்க அவருக்கும் விருப்பம் இல்ல என்றும் கூறப்படுகிறது.
இதனால் தற்போது எச்.வினோத் புதிய படத்தில் இருந்து விலகிவிட்டதாக தகவல்கள் வருகின்றன.
No comments