Vettri

Breaking News

சம்மாந்துறையில் 8லட்சம் பெறுமதியான மோட்டார்சைக்கிளை திருடிய நபர் கைது!!




 சுமார் 8 இலட்சம்  பெறுமதி வாய்ந்த   மோட்டார் சைக்கிளை திருடி சென்ற சந்தேக நபரை சம்மாந்துறை பொலிஸார் கைது செய்துள்ளனர்.


அம்பாறை மாவட்டம் சம்மாந்துறை பொலிஸ் பிரிவிற்குட்பட்ட பகுதியில் சுமார் 8 இலட்சத்திக்கும் மேல் பெறுமதி வாய்ந்த "Bajaj pulsar Ns 200" என்ற வகையான மோட்டார் சைக்கிள் திருடப்பட்டுள்ளதாக  பொலிஸ் நிலையத்தில்   கடந்த   ஜனவரி மாதம் 14ம் திகதி   முறைப்பாடு செய்யப்பட்டிருந்தது.

குறித்த முறைப்பாட்டிற்கமைய  சம்மாந்துறை பொலிஸ் நிலைய பொறுப்பதிகாரி கே.டி.எஸ் ஜெயலத்  வழிகாட்டுதலில் பொலிஸ் நிலைய பெருங்குற்றப் பிரிவு பொறுப்பதிகாரி கே.சதீஸ்கர் தலைமையிலான குழுவினரின் பலன்  விசாரணை நடவடிக்கைகளை மேற்கொண்டிருந்தனர்.

இதன்போது  அக்கரைப்பற்று பிரதேசத்தில் இருந்து மோட்டார்  பைக்கிளை கடந்த ஞாயிற்றுக்கிழமை (28) மீட்டதுடன்  திருட்டு சம்பவத்தில் தொடர்புடைய  சந்தேக நபர் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளதாக பொலிஸார் மேலும் தெரிவித்தனர்.

மேலதிக விசாரணைகளை சம்மாந்துறை பொலிஸார் மேற்கொண்டு வருகின்றமை குறிப்பிடத்தக்கது.



No comments