யுக்திய நடவடிக்கையில் 877 பேர் கைது !
நாடு முழுவதும் கடந்த 24 மணித்தியாலத்தில் மேற்கொள்ளப்பட்ட யுக்திய நடவடிக்கையின் போது 877 சந்தேக நபர்கள் கைது செய்யப்பட்டுள்ளதாக பொதுமக்கள் பாதுகாப்பு அமைச்சு தெரிவித்துள்ளது.
கைது செய்யப்பட்ட 877 சந்தேக நபர்களில் 4 பேர் தடுத்து வைக்கப்பட்டு அவர்களிடம் மேலதிக விசாரணைகள் இடம்பெறுவதாகவும் போதைப்பொருளுக்கு அடிமையான 14 பேர் புனர்வாழ்வு மையங்களுக்கு அனுப்பப்பட்டுள்ளதாகவும் பொலிஸார் குறிப்பிட்டுள்ளனர். இந்த நடவடிக்கையின் போது பொலிஸ் போதைப் பொருள் ஒழிப்பு பணியகம் மற்றும் விசேட பணியகத்தினால் தேடப்படும் பட்டியலில் உள்ளடக்கப்பட்டுள்ள 28 பேரும் கைது செய்யப்பட்டுள்ளனர் .
475 கிராம் ஹெரோயின், 501 கிராம் ஐஸ் போதைபொருள் , 7 கிலோ கஞ்சா, 126 போதை மாத்திரைகள் ஆகியன யுக்திய நடவடிக்கைகளின் போது பொலிஸாரால் கைப்பற்றப்பட்டமை குறிப்பிடத்தக்கது.
No comments