'யுக்திய' நடவடிக்கையில் 838 சந்தேக நபர்கள் கைது
நாடளாவிய ரீதியில் மேற்கொள்ளப்பட்ட யுக்திய நடவடிக்கையின் போது கடந்த 24 மணித்தியாலத்திற்குள் 838 சந்தேக நபர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர்.
இதன்போது போதைப்பொருள் கடத்தலுடன் தொடர்புடைய 549 சந்தேக நபர்களும் ஏனைய குற்றங்களுடன் தொடர்புடைய 289 சந்தேக நபர்களும் கைது செய்யப்பட்டுள்ளனர்.
இந்நிலையில் போதைப்பொருள் கடத்தலுடன் தொடர்புடைய 549 பேரில் 5 பேருக்கு எதிராக விசாரணை முன்னெடுக்கப்பட்டு வருவதுடன் போதைப்பொருளுக்கு அடிமையாக உள்ள 10 பேர் புனர்வாழ்வு மையங்களுக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளனர்.
இதன்போது பொலிஸ் போதைப்பொருள் ஒழிப்புப் பிரிவு மற்றும் விசேட பணியகத்தால் தேடப்பட்டு வரும் பட்டியலில் இருந்த 14 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர்.
ஏனைய குற்றங்கள் தொடர்பில் கைதுசெய்யப்பட்ட 289 சந்தேக நபர்களில் 35 பேர் போதைப்பொருள் குற்றங்கள் தொடர்பில் திறந்த பிடியாணை பெற்றுள்ள நிலையில் 246 பேர் ஏனைய குற்றங்கள் தொடர்பில் திறந்த பிடியாணை பெற்றுள்ளதாக விசாரணையில் தெரியவந்துள்ளது.
யுக்திய நடவடிக்கையின் போது மேற்கொள்ளப்பட்ட விசேட சோதனையில் 211 கிராம் ஹெரோயின் போதைப்பொருள், 78 கிராம் ஐஸ் போதைப்பொருள், 16 கிலோ 600 கிராம் கஞ்சா, 9,974 கஞ்சா இலைகள் , 1,192 போதை மாத்திரைகள், 493 கிராம் மாவா போதைப்பொருள் மற்றும் 36 கிராம் மதனமோதகம் உள்ளிட்ட போதைப்பொருட்கள் கைப்பற்றப்பட்டுள்ளன.
No comments