Vettri

Breaking News

நிறைந்து வழியும் சிறைச்சாலை; கைதிகளை பராமரிக்க ஆண்டுதோறும் 800 கோடி ரூபாய்க்கு மேல் செலவு!!




 சிறைச்சாலைகளில் உள்ள சிறை அறைகளின் கொள்ளளவை விட அதிகள அளவில் கைதிகள் தடுத்து வைக்கப்பட்டுள்மை தெரியவந்துள்ளது.

கைதிகளின்  எண்ணிக்கை 232 சதவீதமாக அதிகரித்துள்ளதாக சிறைச்சாலைகள் தொடர்பில் முன்னெடுக்கப்பட்ட கணக்காய்வு அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது. அத்துடன், சிறைக்


கைதிகளை பராமரிக்க ஆண்டுதோறும் 800 கோடி ரூபாய்க்கு மேல் அரச செலவீனங்கள் ஏற்படுவதாக அந்த அறிக்கையில் கூறப்பட்டுள்ளது.

27 சிறைச்சாலைகளில் 187 கழிவறைகள் பற்றாக்குறையாக உள்ளதாகவும், தற்போதுள்ள 287 கழிவறைகள் பழுதடைந்த நிலையில் இருப்பதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. கைதிகளுக்கு பிணை வழங்கப்பட்டுள்ள போதிலும் பிணை நிபந்தனைகளை பூர்த்தி செய்ய முடியாமல் பெரும் எண்ணிக்கையிலான கைதிகள் சிறையில் உள்ளதாக அந்த அறிக்கை தெரிவிக்கிறது.

அவ்வாறு சிறையில் உள்ள கைதிகளின் எண்ணிக்கை 1,795 என்றும் அந்த அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது. மேலும், 2011 முதல் 2020 வரை இரண்டு சிறைச்சாலைகளில் ஏற்பட்ட பல்வேறு பிரச்சனைகளால் பல கட்டடங்கள் அழிக்கப்பட்டுள்ளதாக அந்த அறிக்கையில் சுட்டிக்காட்டப்பட்டுள்ளது.



No comments