Vettri

Breaking News

சிறுநீரக நோயாளர்களுக்கு 7,500 ரூபாய் கொடுப்பனவு!!




 அஸ்வெசும நலன்புரி நன்மைகள் கொடுப்பனவுத் திட்டத்தை திருத்தங்களுடன் உள்ளடக்கி நடைமுறைப்படுத்த அமைச்சரவை அனுமதி வழங்கியுள்ளது.

அதன்படி, அஸ்வெசும பயனாளியாக தகைமை பெற்றவர்களில் சமூகப் பிரிவுக்கான நன்மைகளைப் பெற்றுக்கொள்வதற்கான செல்லுபடிக் காலத்தை ஏப்ரல் முதலாம் திகதி முதல் டிசம்பர் 31 ஆம் திகதி வரை நீடிக்கப்பட்டுள்ளது.

அத்துடன், பொருளாதார நெருக்கடியால் தற்காலிகமாக வருமானம் இழக்கப்பட்டுள்ளவர்கள் நன்மைகளை பெற்றுக்கொள்ளும் செல்லுபடிக் காலத்தை ஜனவரி முதலாம் திகதி முதல் டிசம்பர் 31 ஆம் திகதி வரை நீடிக்கப்பட்டுள்ளது.

தற்போதுள்ள சமூகப் பிரிவு மற்றும் பொருளாதார நெருக்கடியால் தற்காலிகமாக வருமானம் இழக்கப்பட்டுள்ள பிரிவு போன்ற இரண்டு பிரிவுகளையும் ஒன்றிணைத்து 80,000 குடும்பங்களுக்காக ஜனவரி முதலாம் திகதி முதல் வழங்கப்படும் 5,000 ரூபாய் தொகையை எதிர்வரும் டிசம்பர் 31 ஆம் திகதி வரை செலுத்தவும் அமைச்சரவை அனுமதி வழங்கியுள்ளது.

அஸ்வெசும திட்டத்தின் இரண்டாவது சுற்றுக்கான விண்ணப்பங்கள் கோரலை 2024 முதலாம் காலாண்டில் ஆரம்பித்து 2024 ஜூன் மாதத்தில் நிறைவு செய்து ஜீலை மாதம் தொடக்கம் கொடுப்பனவுகளை வழங்குவதற்கும் அமைச்சரவை அனுமதி வழங்கியுள்ளது.

அதேநேரம், அடையாளம் காணப்படாத சிறுநீரக நோயாளர்களுக்கு 7,500 ரூபாயும் இயலாமையுள்ள நபர்களுக்கு 7,500 ரூபாயும் முதியோர்களுக்கு 3,000 ரூபாயும் 2024 ஏப்ரல் மாதம் முதல் மாதாந்தக் கொடுப்பனவாக செலுத்தவும் அமைச்சரவை அனுமதி வழங்கியுள்ளமையும் குறிப்பிடத்தக்கது


No comments