''யுக்திய'' நடவடிக்கையில் 729 சந்தேக நபர்கள் கைது !!
இன்று (31) நள்ளிரவு 12.30 மணியுடன் நிறைவடைந்த 24 மணித்தியாலங்களில் யுக்திய நடவடிக்கையின் கீழ் மேலும் 729 சந்தேக நபர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர்.
போதைப்பொருள் குற்றங்களுடன் தொடர்புடைய 499 சந்தேகநபர்களும் குற்றத்தடுப்பு பிரிவிற்கு அனுப்பப்பட்டிருந்த பட்டியலில் இருந்த 230 சந்தேக நபர்களும் இதன்போது கைது செய்யப்பட்டுள்ளதாக பொது மக்கள் பாதுகாப்பு அமைச்சு தெரிவித்துள்ளது.
இந்த நடவடிக்கையின் போது 146 கிராம் ஹெரோயின் மற்றும் 119 கிராம் ஐஸ் உள்ளிட்ட போதைப்பொருட்களை பாதுகாப்பு பிரிவினர் கைப்பற்றியுள்ளனர்.
மூன்று சந்தேக நபர்களிடம் தடுப்புக் காவல் உத்தரவின் பேரில் மேலதிக விசாரணைகள் நடத்தப்பட்டு வருவதாகவும், போதைக்கு அடிமையான 04 பேர் புனர்வாழ்விற்காக பரிந்துரைக்கப்பட்டுள்ளதாகவும் பொது மக்கள் பாதுகாப்பு அமைச்சு தெரிவித்துள்ளது.
குற்றத் தடுப்பு பிரிவுக்கு பரிந்துரைக்கப்பட்ட 230 சந்தேக நபர்களில், போதைப்பொருள் குற்றங்கள் தொடர்பான திறந்த பிடியாணை பெற்ற 19 சந்தேக நபர்களும், போதைப்பொருள் அல்லாத குற்றங்கள் தொடர்பான திறந்த பிடியாணை பெற்ற 204 பேரும் கைது செய்யப்பட்டுள்ளனர்.
No comments