57வது பிறந்தநாளை கொண்டாடும் இசைப்புயல் ஏ.ஆர்.ரகுமான் சொத்து மதிப்பு- பல கோடி
ஏ.ஆர்.ரகுமான்
ஒரு நல்ல தொடக்கத்திற்கு பொதுவாக மக்கள் ரோஜா கொடுத்து ஆரம்பிப்பார்கள், அப்படி ஏ.ஆர்.ரகுமான் தனது திரைப்பயணத்தை ரோஜா என்ற படம் மூலம் ஆரம்பித்தார்.
அன்று அவருக்கு கிடைத்த வெற்றி ரோஜாவால் இப்போது அவரது பயணம் பிரம்மிக்க வைக்கும் அளவிற்கு வளர்ந்துள்ளது. ரோஜாவிற்கு பின் தமிழில் இவர் தொட்டதெல்லாம் ஹிட்டாக பாலிவுட், ஹாலிவுட் என அடுத்தடுத்து வளர்ந்தார்.கடந்த 2008ம் ஆண்டு ஸ்லம்டாக் மில்லியனர் என்கிற ஹாலிவுட் படத்தில் ஜெய் ஹோ பாடலுக்காக ஆஸ்கர் வென்று ஒரே நேரத்தில் 2 ஆஸ்கர் விருதுகளை சென்று சரித்திரத்தில் இடம்பிடித்தார்.
இசையமைப்பாளராக அறிமுகமாகி 30 ஆண்டுகளாக முன்னணி இசையமைப்பாளராக இருக்கும் இவர் தமிழ் மட்டுமின்றி தெலுங்கு, ஹிந்தி, மலையாளம் என பல்வேறு மொழி படங்களுக்கு இசையமைத்திருக்கிறார்.
சொத்து மதிப்பு
ஒரு படத்துக்கு இசையமைக்க ரூ.8 கோடி வரை சம்பளமாக வாங்கி வரும் ஏ.ஆர்.ரகுமான், இந்தியா மற்றும் வெளிநாடுகளில் இசைக்கச்சேரி நடத்தி அதன் மூலமும் நிறைய சம்பாதிக்கிறார்.
சென்னையில் சொகுசு வீடு, சென்னையில் பிலிம் ஸ்டூடியோ, மும்பையில் வீடு என வைத்துள்ளார்.
துபாயில் பல கோடி ரூபாய் மதிப்பில் பிரம்மாண்ட இசைக்கூடம் ஒன்றையும் நடத்தி வருகிறார்.
இன்று தனது 57வது பிறந்தநாளை கொண்டாடி வரும் இசைப்புயல் ஏ.ஆர்.ரகுமானின் சொத்து மதிப்பு ரூ. 600 கோடி இருக்கும் என கூறப்படுகிறது.
இந்திய சினிமாவிலேயே அதிக சொத்து மதிப்பு கொண்ட இசையமைப்பாளர் ஏ.ஆர்.ரகுமான் என்பது குறிப்பிடத்தக்கது.
No comments