நாடளாவிய ரீதியிலுள்ள அரச வைத்தியசாலைகளின் தினசரி நடவடிக்கைகளை மேற்கொள்ள 500 இராணுவ வீரர்கள் பணியில் ஈடுபடுத்தப்பட்டுள்ளனர்.
நாடளாவிய ரீதியிலுள்ள அரச வைத்தியசாலைகளின் தினசரி நடவடிக்கைகளை மேற்கொள்ள 500 இராணுவ வீரர்கள் பணியில் ஈடுபடுத்தப்பட்டுள்ளனர்.
அரச வைத்தியசாலைகளில் கடமையாற்றும் சிற்றூழியர்களின் வேலைநிறுத்தம் காரணமாக நாடளாவிய ரீதியில் உள்ள வைத்தியசாலைகளில் தடைப்பட்ட சுகாதார சேவைகளை மீளமைக்க இராணுவப் படையினர் ஈடுபடுத்தப்பட்டுள்ளனர்.
பல கோரிக்கைகளை முன்வைத்து நாடளாவிய ரீதியில் அரச வைத்தியசாலைகளில் கடமையாற்றும் சிற்றூழியர்களின் பணிப்பகிஷ்கரிப்பு காரணமாக வைத்தியசாலையின் செயற்பாடுகளை இடையூறு இன்றி மீளமைக்குமாறு சுகாதார அமைச்சு விடுத்த கோரிக்கைக்கு அமைய இராணுவத் தளபதி லெப்டினன்ட் ஜெனரல் விக்கும் லியனகேவின் பணிப்புரைக்கமைய இராணுவப் படையினர் ஈடுபடுத்தப்பட்டுள்ளனர்.
இதன்படி, மேற்கு மற்றும் மத்திய பாதுகாப்பு படைத் தளபதிகளின் மேற்பார்வையில் கொழும்பு மற்றும் கண்டி தேசிய வைத்தியசாலைகள், களுபோவில, கராப்பிட்டி, மஹ்மோதர, பேராதனை மற்றும் குருநாகல் போதனா வைத்தியசாலைகள், மாத்தறை பலாங்கொடை, அஹெலியகொட, நாவலப்பிட்டி, பதுளை, கம்பளை, மீரிகம ஆகிய வைத்தியசாலைகளுக்கு இராணுவப் படையினர் களமிறக்கப்பட்டுள்ளனர்.
இந்த மருத்துவமனைகளின் தேவைக்கு ஏற்ப, இதுவரை 500 இராணுவ வீரர்கள் பணியில் ஈடுபடுத்தப்பட்டுள்ளனர
chat.whatsapp.com/GWVm2nVM0MmBeWdHrnP
No comments