Vettri

Breaking News

50% விவசாயிகளுக்கு உர மானியம் இல்லை!!





 பெரும்போகத்தில் உரம் கொள்முதல் செய்வதற்கான பணத்தை விவசாயிகளின் வங்கிக் கணக்கில் செலுத்த விவசாய அபிவிருத்தி திணைக்களத்திற்கு துறைக்கு வழங்கப்பட்ட நிதி ஒதுக்கீடு தீர்ந்துள்ள நிலையில் திறைசேரியில் மேலும் 2000 மில்லியன் கோரப்பட்டுள்ளதாக திணைக்களம் குறிப்பிட்டுள்ளது.

பணம் கிடைத்தவுடன் விவசாயிகளின் கணக்கில் வரவு வைக்க திட்டமிடப்பட்டுள்ளதாக திணைக்களம் தெரிவித்துள்ளது.
தற்போது விவசாயிகளின் கணக்குகளுக்கு 5000 மில்லியன் ரூபா விடுவிக்கப்பட்டுள்ளது.

583,372 விவசாயிகளுக்கு இந்த தொகை வழங்கப்பட்டுள்ளதாக விவசாய அபிவிருத்தி திணைக்களம் தெரிவித்துள்ளது.
சில பகுதிகளில் உரம் கொள்முதல் செய்ய அரசிடம் இருந்து இன்னும் பணம் வரவில்லை என விவசாயிகள் தெரிவித்துள்ளனர்.

No comments