Vettri

Breaking News

டிசம்பரில் பணவீக்கம் 4.2% ஆக அதிகரிப்பு!!





 தேசிய நுகர்வோர் விலை சுட்டெண்ணுக்கு (NCPI) அமைய ஒட்டுமொத்த பணவீக்க விகிதம் 2023 டிசம்பரில் 4.2% ஆக அதிகரித்துள்ளது.

மக்கள்தொகை கணக்கெடுப்பு மற்றும் புள்ளிவிபரத் திணைக்களத்தின் படி, இது நவம்பர் 2023 இல் பதிவு செய்யப்பட்ட 2.8% இலிருந்து அதிகரித்துள்ளது.

இதேவேளை கடந்த நவம்பர் மாதத்துடன் ஒப்பிடும் போது உணவுப் பணவீக்கம் 2023 டிசம்பரில் 1.6% ஆக அதிகரித்துள்ளது,

இருப்பினும், உணவு அல்லாத பணவீக்கம் நவம்பரில் பதிவான 7.1% உடன் ஒப்பிடுகையில், 2023 டிசம்பரில் 6.3% ஆகக் குறைந்துள்ளது.

No comments