Vettri

Breaking News

பாடசாலை மாணவர்களுக்கான மதிய உணவு தொகை 30 ரூபாவினால் அதிகரிக்கப்படும்!





 பாடசாலை மாணவர் மத்திய உணவுக்காக தற்போது வழங்கப்படும் 85 ரூபாவை 115 ரூபாவாக அதிகரிப்பது தொடர்பில் கல்வி அமைச்சு கவனம் செலுத்தியுள்ளது.

தற்போதைய விலையில் மதிய உணவை வழங்க முடியாது என விநியோகத்தர்கள் அறிவித்ததைத் தொடர்ந்து அமைச்சு இந்த நடவடிக்கையை எடுத்துள்ளது.
அண்மையில் இத்தொகை அதிகரிப்பு தொடர்பான கலந்துரையாடல் அமைச்சில் இடம்பெற்றதுடன், இதில் நிதியமைச்சின் பிரதிநிதிகளும் கலந்துகொண்டனர். ஒரு வேளை உணவுக்கு நூற்றி பதினைந்து ரூபா வழங்கினால் போதும் எனவும், சந்தையில் அரிசி, பருப்பு உள்ளிட்ட உலர் உணவுப் பொருட்களின் விலைகள் மீள்பரிசீலனை செய்யப்பட்டு அடுத்தவாரம் இறுதித் தீர்மானம் எடுக்கப்படும் என அமைச்சு வட்டாரங்கள் தெரிவிக்கின்றன. .
மதிய உணவு திட்டத்தின் பலனை இதுவரை பத்து லட்சம் மாணவர்கள் அனுபவித்து வருகின்றனர் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

No comments