Vettri

Breaking News

பட்டத்துடன் 30 அடி தூரம் பறந்த இளைஞன்! யாழில் சம்பவம்




 யாழ்ப்பாணத்தில் பட்டத்தின் கயிற்றில் ஏறி வானத்தை நோக்கி சென்ற வாலிபர் ஒருவரின் காணொளி தற்போது சமூக வலைதளங்களில் வைரலாக பரவி வருகிறது.

யாழ்ப்பாணம் - தொண்டமனாறு பகுதியைச் சேர்ந்த இளைஞன் ஒருவர் பெரிய பட்டம் பறக்கப் பயன்படும் கயிற்றில் ஏறி சுமார் 30 அடி உயரத்தில் ஏறி புகைப்படம் எடுத்துள்ளார்.

வல்வெட்டித்துறை பட்டத் திருவிழாவிற்காக தயாரிக்கப்பட்ட பெரிய பட்டத்தின் கயிற்றில் ஏறியே குறித்த இளைஞன் புகைப்படம் எடுத்துள்ளார்.

பட்டத்துடன் பல அடி தூரம் பறந்த இளைஞன்! யாழில் நடந்த சம்பவம் | Valvettithura Degree Festival

பட்டத்தின் கயிற்றில் ஏறிய இளைஞன் மீண்டும் கீழே வரமுடியாமல் அசௌகரியத்தில் இருந்ததாகவும் பின்னர் கடின முயற்சியின் பின்னர் காப்பாற்றப்பட்டதாகவும் அங்கிருந்தவர்கள் தெரிவித்துள்ளனர்.

இதற்கு முன் 2021ஆம் ஆண்டு, பெரிய பட்டத்தை பறக்க விட சென்ற இளைஞன் ஒருவர் கயிற்றில் தொங்கி சுமார் 100 அடி உயரத்தில் உயிர்தப்பிய சம்பவம் பதிவாகியுள்ளமை குறிப்பிடத்தக்கது.

No comments