26 நாட்களில் 6 பேரை பலிகொண்ட நெடுஞ்சாலை விபத்துக்கள்!
இந்த வருடத்தின் கடந்த 26 நாட்களில் நெடுஞ்சாலைகளில் இடம்பெற்ற விபத்துக்களில் 6 பேர் உயிரிழந்துள்ளதாக வீதி அபிவிருத்தி அதிகார சபை தெரிவித்துள்ளது.
ஆனால், கடந்த ஆண்டு நெடுஞ்சாலைகளில் இடம்பெற்ற விபத்துகளில் 5 பேர் மட்டுமே உயிரிழந்துள்ளனர்.
நெடுஞ்சாலைகளைப் பயன்படுத்தும் போது பாதைகளில் வாகனங்களுக்கு இடையில் சரியான இடைவெளியை பேணாதது பல விபத்துக்களை ஏற்படுத்துவதாக வீதி அபிவிருத்தி அதிகார சபை சுட்டிக்காட்டியுள்ளது.
No comments