24 மணித்தியாலத்தில் 1,184 பேர் கைது!!
நாடளாவிய ரீதியில் முன்னெடுக்கப்பட்டு வரும் விசேட நடவடிக்கையின் கீழ், இன்று அதிகாலை 12.30 உடன் நிறைவடைந்த 24 மணித்தியாலங்களில் 1,184 பேர் கைது செய்யப்பட்டுள்ளதாக பொலிஸ் ஊடகப்பிரிவு தெரிவித்துள்ளது.
அவர்களில் 59 பேர் தடுப்புக் காவல் உத்தரவில் வைக்கப்பட்டு, விசாரிக்கப்பட்டு வருகின்றனர்.
சட்டவிரோத சொத்துக்கள் தொடர்பில் 23 சந்தேகநபர்கள் விசாரணைக்கு உட்படுத்தப்பட்டுள்ளதுடன், போதைப்பொருளுக்கு அடிமையான 49 பேர் புனர்வாழ்வு நிலையங்களுக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளனர்.
குறித்த சுற்றிவளைப்பு நடவடிக்கையின் போது 337கிராம் ஹெரோயின், 242கிராம் ஐஸ் மற்றும் 1 கிலோ 226 கிராம் நிறையுடைய குஷ் போதைப்பொருள் மீட்கப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
No comments