24 மணித்தியாலங்களில் 1,135 பேர் கைது!
நாடளாவிய ரீதியில் முன்னெடுக்கப்படும் விசேட சோதனை நடவடிக்கையின் கீழ், நேற்று காலையுடன் நிறைவடைந்த 24 மணி நேரத்தில், 1,135பேர் கைது செய்யப்பட்டுள்ளனர். அவர்களில் 46 பேர் தடுப்புக் காவல் உத்தரவின் கீழ் விசாரணை செய்யப்பட்டு வருவதாக பொதுமக்கள் பாதுகாப்பு அமைச்சு தெரிவித்துள்ளது. அத்துடன், போதைப்பொருட்களுக்கு அடிமையான 16 பேர் புனர்வாழ்வு மையங்களுக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளனர். குறித்த காலப்பகுதியில், 05 கிலோ 900 கிராம் கஞ்சா, 56 கிலோ 100 கிராம் ஹெரோயின், 189 கிலோ 600 கிராம் ஐஸ், 2,420 கஞ்சா செடிகள் மற்றும் 2,024 போதைமாத்திரைகள் என்பவற்றுடன் பல்வேறு போதைப்பொருட்களும் மீட்கப்பட்டுள்ளன. இதேவேளை, கைது செய்யப்பட்டவர்களில் தண்டனை பெற்ற குற்றவாளிகள் பட்டியலில் இருந்த 86 பேரும் அடங்குவர் என தெரிவிக்கப்பட்டுள்ளது
No comments