Vettri

Breaking News

மட்டக்களப்பு வைத்தியசாலையிலிருந்து நவகிரிநகர் 18ம் கொலனிக்கான புதிய பேருந்து சேவைகள் ஆரம்பம்!!




 மட்டக்களப்பு வைத்தியசாலையிலிருந்து நவகிரிநகர் முப்பத்தெட்டாம் கொலனிக்கான புதிய பேருந்து சேவைகள் ஆரம்பம்.









கிழக்கு பிராந்தியத்திற்குட்பட்ட பேரூந்து சாலைகளில் நிலவும் பிரச்சினைகள் குறித்து தெளிவுபடுத்தும் முகமாக போக்குவரத்து, நெடுஞ்சாலைகள் மற்றும் வெகுஜன ஊடக துறை அமைச்சர் கலாநிதி பந்துல குணவர்தன அவர்களுடன் மட்டக்களப்பு பேரூந்து சாலைக்கான விசேட களவிஜயமொன்றினை நேற்றையதினம் முன்னெடுத்திருந்தோம்.


இதன் போது பேரூந்து சாலை முகாமையாளர்களுடன் கலந்துரையாடிய கௌரவ. அமைச்சர் அங்கு நிலவுகின்ற பிரச்சனைகள் தொடர்பில் விரைவான தீர்வுகளை வழங்குமாறு சம்பந்தப்பட்ட அதிகாரிகளுக்கு பணிப்புரை வழங்கியிருந்தார்.


கிழக்கு மாகாணத்தை மையமாக கொண்ட சுற்றுலா வர்த்தகத்திற்கான போக்குவரத்து சேவைகளை விரிவுபடுத்துவதுடன் வருமானத்தை அதிகரிக்கும் வகையில் சொகுசு பஸ் சேவைகளை அறிமுகம் செய்வதற்கான புதிய வேலைத்திட்டமும் நடைமுறைப்படுத்தப்படுமென அமைச்சர் வலியுறுத்தியிருந்தார்.


இதேவேளை, மட்டக்களப்பு வைத்தியசாலையிலிருந்து நவகிரிநகர் முப்பத்தெட்டாம் கொலனி வரையிலான  போக்குவரத்து நடவடிக்கைகளுக்காக புதிய பேருந்து சேவையினையும் அமைச்சருடன் இணைந்து நேற்றையதினம் ஆரம்பித்து வைத்திருந்தோம்.


இதன்போது ஊடக அமைச்சின் செயலாளர் அனுஷ பல்பிட, இலங்கை போக்குவரத்து சபையின் தலைவர் சார்பாக பிரதிப் பொது முகாமையாளர் (இயக்கம்) திரு.பண்டுக ஸ்வர்ணஹன்ச, கிழக்கு பிராந்திய பிரதம முகாமையாளர் ஆர்.  எம்.  டி.  இந்நிகழ்வில் திரு.விஜித தர்மசேன, மட்டக்களப்பு டிப்போ முகாமையாளர் திரு.கந்தசாமி ஸ்ரீதரன் உட்பட முக்கியஸ்தர்கள் பலரும் கலந்து கொண்டிருந்தனர்.

No comments