Vettri

Breaking News

1500 ரூபா இலஞ்சம் பெற்ற குற்றச்சாட்டு : முரண்பட்ட சாட்சியங்களால் முன்னாள் பொலிஸ் சார்ஜன்ட் விடுதலை!




 


1,500 ரூபா இலஞ்சம் பெற்றதாக குற்றம் சுமத்தப்பட்டிருந்த மதவாச்சி  பொலிஸின் முன்னாள் பொலிஸ் சார்ஜன்ட்  எம்.டி.சரத் விஜயதுங்கவை இலஞ்சக் குற்றச்சாட்டிலிருந்து விடுவிக்க கொழும்பு பிரதான நீதிவான் பிரசன்ன அல்விஸ் இன்று (12)  உத்தரவிட்டுள்ளார்.

தனது தீர்ப்பை அறிவித்த  நீதிவான், முரண்பட்ட சாட்சியங்கள் காரணமாக குற்றம் சாட்டப்பட்டவர்கள் விடுவிக்கப்படுகிறார்கள் என  தெரிவித்தார்.

2012 ஆம் ஆண்டு மார்ச் மாதம் 6 ஆம் திகதி  மோட்டார் சைக்கிள் ஒன்றை விடுவிப்பதற்காக 1,500 ரூபாவை கோரிய மற்றும் பெற்றமைக்காக இலஞ்சம், ஊழல் குற்றச்சாட்டுகள் விசாரணை ஆணைக்குழு இந்த வழக்கை தாக்கல் செய்திருந்தது.

இந்நிலையிலேயே இந்த வழக்கு விசாரணைகளின்போது  முரணான சாட்சியங்கள் காரணமாக முதல் இரண்டு குற்றச்சாட்டுக்களிலிருந்து குற்றம் சாட்டப்பட்டவரை விடுவிக்க நீதவான் உத்தரவிட்டது.


No comments