Vettri

Breaking News

சட்டவிரோதமாக கடலட்டை தொழிலில் ஈடுபட்ட 12 பேர் கடற்படையினரால் கைது !!




 மன்னார் ஓலைத்தொடுவாய் கடற்பரப்பில் சட்டவிரோதமாக கடலட்டை தொழிலில் ஈடுபட்ட 12 பேர் கடற்படையினரால் நேற்று கைது செய்யப்பட்டுள்ளனர்.

ஓலைத்தொடுவாய் கடற்பரப்பில் கடற்படையினர் மேற்கொண்ட விசேட  தேடுதல் நடவடிக்கையின் போது நீரில் மூழ்கி கடலட்டை   பிடித்துக் கொண்டிருந்த மேற்படி சந்தேகநபர்களை கடற்படையினர் கைது செய்துள்ளனர்.

இதன் போது 4 படகுகள், டைவிங் கருவிகள் மற்றும் சட்டவிரோதமாக  பிடிக்கப்பட்ட சுமார் 968 கடலட்டைகள், 34 சங்குகளும் கைப்பற்றப்பட்டுள்ளனர்.

No comments