கொழும்பில் ஆபத்தில் உள்ள 06 அடுக்குமாடிக் குடியிருப்புகள்!!
கொழும்பு நகரில் உள்ள 06 அடுக்குமாடி குடியிருப்புகள்உட்பட 08 கட்டிடங்களை அபாயகரமான சூழ்நிலை காரணமாக சீர்செய்வதற்கு அல்லது இடிப்பதற்கு தீர்மானிக்கப்பட்டுள்ளது.
கொழும்பு மாநகரம்தொடர்பான எதிர்காலத் திட்டங்கள் குறித்து அறிவிக்கும் செய்தியாளர் சந்திப்பில் கலந்துகொண்ட மாநகர சபையின் பிரதம வைத்திய அதிகாரி டொக்டர் ருவன் விஜயமுனி இவ்வாறு தெரிவித்தார்.
இதேவேளை கொழும்பு மாநகர சபை எல்லைக்குள் 08 கட்டிடங்கள் அபாய நிலையில் உள்ளதாக அடையாளம் காணப்பட்டுள்ளதாக குறிப்பிடப்பட்டுள்ளது.
இதன்படி, கெத்தாராம பரோன் ஜயதிலக்க கல்லூரி கட்டிடம், ஜும்மா மஸ்ஜித் வீதி வீடுகள், திம்பிரிகஸ்யாய அபயரம் மூன்று மாடி வீடுகள் உட்பட 06 அடுக்குமாடி குடியிருப்புகள் என்பன அவற்றில் உள்ளடங்குவதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
No comments