Vettri

Breaking News

04 நாட்களில் அதிகளவான சுற்றுலா பயணிகள் இலங்கைக்கு வருகை !




 புது வருடத்தின் முதல் 04 நாட்களில் மாத்திரம் அதிகளவான சுற்றுலா பயணிகள் இலங்கைக்கு வருகை தந்துள்ளதாக சுற்றுலா அபிவிருத்தி அதிகாரசபை தகவல் வெளியிட்டுள்ளது.

இதன்படி கடந்த முதலாம் திகதி முதல் 4 ஆம் திகதி வரையில் மாத்திரம் 25,619 சுற்றுலாப் பயணிகள் இலங்கைக்கு வருகை தந்துள்ளதாக சுற்றுலா அபிவிருத்தி அதிகார சபை தெரிவித்துள்ளது.


இவ்வாறு வந்த சுற்றுலான பயணிகளில் 5,060 பேர், ரஷ்யாவிலிருந்து வந்துள்ளதுடன், 3,333 சுற்றுலாப் பயணிகள் இந்தியாவிலிருந்து வருகை தந்துள்ளனர்.

புதுவருடத்தின் நான்கு நாட்களில் வந்து குவிந்த சுற்றுலா பயணிகள் : முதலிடத்தில் உள்ள நாடு எது தெரியுமா..! | Increase In Tourist Arrivals On New Year

மேலும், ஜேர்மனி, பிரித்தானியா, அவுஸ்திரேலியா, சீனா, பிரான்ஸ், நெதர்லாந்து மற்றும் அமெரிக்கா ஆகிய நாடுகளில் இருந்தும் அதிகளவான சுற்றுலாப் பயணிகள் வருகை தந்துள்ளதாக சுற்றுலா அபிவிருத்தி அதிகார சபை தெரிவித்துள்ளது.


கடந்த ஆண்டில் மட்டும் 14 லட்சத்து எண்பத்து ஏழாயிரத்து முன்னூற்று மூன்று சுற்றுலாப் பயணிகள் நாட்டுக்கு வருகை தந்துள்ளதுடன், இந்த ஆண்டு அந்த எண்ணிக்கை 23 லட்சமாக அதிகரிப்பதற்கு எதிர்பார்க்கப்படுகிறது.



இலங்கையில் சுற்றுலாதாரிகளின் வருகை மூலம் பெருமளவு வருமானத்தை அரசு பெற்றுக்கொள்வது குறிப்பிடத்தக்கது.


No comments