Vettri

Breaking News

உயர்தரப் பரீட்சை இன்று(04) ஆரம்பமாகிறது!






2023 ஆம் ஆண்டுக்கான கல்வி பொதுத்தராதரஉயர்தரப் பரீட்சை இன்று(04) ஆரம்பமாகிறது.

இம்முறை பரீட்சையில் 346,976 பேர் தோற்றவுள்ளதுடன், இவர்களில் 281,445 பேர் பாடசாலை பரீட்சார்த்திகள் ஆவர்.

உயர்தர பரீட்சையை முன்னிட்டு, நாடு முழுவதும் 2298 பரீட்சை மத்திய நிலையங்கள் ஸ்தாபிக்கப்பட்டுள்ளதாக பரீட்சைகள் ஆணையாளர் நாயகம் அமித் ஜயசுந்தர குறிப்பிட்டுள்ளார்.

இன்று ஆரம்பமாகவுள்ள பரீட்சை எதிர்வரும் 31 ஆம் திகதி வரை இடம்பெறவுள்ளது.

மழையுடன் கூடிய வானிலையால் பரீட்சைக்கு இடையூறு ஏற்படாத வகையில் பரீட்சையை நடத்துவதற்கு பரீட்சை திணைக்களம் மற்றும் இடர் முகாமைத்துவ நிலையம் இணைந்து வேலைத்திட்டமொன்றை வகுத்துள்ளன. அதற்கமைய வெலிகந்த, அரலகங்வில மற்றும் திம்புலாகல கல்வி வலயங்களைச் சேர்ந்த பரீட்சார்த்திகளுக்காக மனம்பிட்டிய சிங்கள மகா வித்தியாலயத்தில் விசேட பரீட்சை நிலையமொன்று அமைக்கப்பட்டுள்ளதாக பரீட்சைகள் திணைக்களம் தெரிவித்துள்ளது. 

No comments