GMOA – பதில் பொலிஸ் மா அதிபர் சந்திப்பு!!
அரச மருத்துவ அதிகாரிகள் சங்கம் (GMOA) பதில் பொலிஸ் மா அதிபர் (IGP) தேசபந்து தென்னகோனை சந்தித்துள்ளது. GMOAவின் செயலாளர் ஹரித அலுத்கே உள்ளிட்ட குழுவினர், பதில் பொலிஸ் மா அதிபரை நேற்று சந்தித்ததாக தெரிவிக்கப்படுகின்றது.
போலியான மருத்துவர்களாக தம்மை அடையாளப்படுத்தும் நபர்களைக் கண்டறிந்து நடவடிக்கை எடுப்பது குறித்து கலந்துரையாடலில் கவனம் செலுத்தப்பட்டுள்ளது.
No comments