Vettri

Breaking News

மட்டக்களப்பு மாவட்டத்திற்கான புதிய அரசாங்க அதிபர் நியமனம் !!!




 மட்டக்களப்பு மாவட்டத்திற்கான புதிய அரசாங்க அதிபர் நியமனம் 



மட்டக்களப்பு மாவட்டத்திற்கான புதிய அரசாங்க அதிபராக திருமதி.முரளிதரன் அவர்கள் இன்றையதினம் நியமனம் பெற்றுள்ளார். இலங்கை நிர்வாக சேவை தரத்தின் விசேட  தரத்தையுடைய ஒரு சிரேஸ்ட நிர்வாக அதிகாரியான இவர் கிழக்கு மாகாண சபையில் பல்வேறு நிர்வாக பதவிகளை வகித்திருந்ததோடு இறுதியாக கிழக்கு மாகாண சபையின் சுகாதார சுதேச  அமைச்சின் செயலாளராகவும் கடமையாற்றியிருந்தார்.


குறித்த நியமனமானது இன்றைய தினம்  கிராமிய வீதிகள் அபிவிருத்தி இராஜாங்க அமைச்சரும் மட்டக்களப்பு மாவட்ட அபிவிருத்திக் குழுத் தலைவருமான கெளரவ சிவ.சந்திரகாந்தன் மற்றும் பொது நிருவாக, உள்நாட்டலுவல்கள், மாகாண சபை௧ள் மற்றும் உள்ளூராட்சி அமைச்சின் செயலாளர் திரு. கே.டி.என். ரஞ்சித் அசோக ஆகியோர் முன்னிலையில் இலங்கை ஜனநாயக சோஷலிச குடியரசின்  கெளரவ பிரதமர் தினேஷ் குணவர்த்தன அவர்களினால் வழங்கி வைக்கப்பட்டது.

No comments