இந்தியாவிலிருந்து சம்பா அரிசி இறக்குமதி !
இந்தியாவிலிருந்து இறக்குமதி செய்யப்படவுள்ள சம்பா அரிசி தொகையின் முதல் கட்டம் எதிர்வரும் இரண்டு வாரங்களுக்குள் நாட்டிற்கு கொண்டுவரப்படும் என அரச வணிகக் கூட்டுத்தாபனம் தெரிவித்துள்ளது.
அமைச்சரவையின் அனுமதியுடன் 50,000 மெட்ரிக் தொன் சம்பா அரிசி இறக்குமதி செய்யப்படுவதாக கூட்டுத்தாபன தலைவர் ஆசிரி வலிசுந்தர குறிப்பிட்டுள்ளார்.
இதற்கான விலைமனு கோரல் நேற்றுடன்(05) நிறைவடைந்தததாக அவர் தெரிவித்துள்ளார்.
இதேவேளை, நிர்ணய விலையை விட அதிக விலைக்கு அரிசியை விற்பனை செய்யும் வர்த்தகர்களை கைது செய்யும் நடவடிக்கைகள் தொடர்ந்தும் முன்னெடுக்கப்படுவதாக நுகர்வோர் விவகார அதிகாரசபை தெரிவித்துள்ளது. அதிக விலைக்கு அரிசி விற்பனை செய்த ஆயிரத்துக்கும் மேற்பட்ட வர்த்தகர்களுக்கு எதிராக சட்ட நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக அதிகாரசபை மேலும் குறிப்பிட்டுள்ளது.
No comments