Vettri

Breaking News

'யுக்திய' சுற்றிவளைப்பு இன்று முதல் மீள ஆரம்பம்




 போதைப்பொருள் கடத்தல்காரர்களை கைது செய்வதற்காக முன்னெடுக்கப்படும் யுக்திய சுற்றிவளைப்பு இன்று(27) முதல் மீள ஆரம்பிக்கப்படவுள்ளதாக பொதுமக்கள் பாதுகாப்பு அமைச்சர் டிரான் அலஸ் தெரிவித்துள்ளார்.



போதைப்பொருள் கடத்தல்காரர்கள் சகலரையும் சட்டத்திற்கு முன் நிறுத்தும் வரையில் இந்த சுற்றிவளைப்பு முன்னெடுக்கப்படும் என அவர் தெரிவித்துள்ளார்.

நத்தார் பண்டிகையை முன்னிட்டு பொலிஸார் பாதுகாப்பு கடமைகளில் ஈடுபடுத்தப்பட்டமையால் நேற்றும்(26) நேற்று முன்தினமும்(25) யுக்திய சுற்றிவளைப்பு தற்காலிகமாக நிறுத்தப்பட்டிருந்தது.

இதனூடாக ஒரு வாரத்தில் 13,666 பேர் கைது செய்யப்பட்டிருந்தனர். கைது செய்யப்பட்டவர்களில் 717 பேர் தடுத்து வைத்து விசாரணை செய்யப்படுகின்றனர்.

No comments