பொலிஸ் சார்ஜன்ட் ஒருவருக்கு நேர்ந்த கதி!
பொலிஸ் சோதனை நடவடிக்கையின் போது பொலிஸ் அதிகாரி ஒருவரின் தலையில் கல் வீச்சு தாக்குதல் சம்பவம் ஒன்று தெமட்டகொடவில் பதிவாகியுள்ளது.
தெமட்டகொட லக்ஹிரு செவன அடுக்குமாடி குடியிருப்பை சுற்றிவளைத்து நேற்று (27) மேற்கொள்ளப்பட்ட சோதனை நடவடிக்கையின் போதே இந்த சம்பவம் இடம்பெற்றுள்ளது.
இதன்போது, கற்களை வீசித் தப்பிச் செல்ல முயன்ற பிரபல போதைப்பொருள் வியாபாரி உட்பட 53 பேர் கைது செய்யப்பட்டதாக தெமட்டகொட பொலிஸ் நிலைய பொறுப்பதிகாரி பிரதான பொலிஸ் பரிசோதகர் கபில பண்டார தெரிவித்தார்.
காயமடைந்த பொலிஸ் சார்ஜன்ட் சமரஜீவ கொழும்பு தேசிய வைத்தியசாலையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளார்.
சார்ஜண்டை காயப்படுத்திய போதைப்பொருள் வியாபாரி மாளிகாவத்தே அசிதவிடம் இருந்து உள் நாட்டில் தயாரிக்கப்பட்ட கைக்குண்டு மற்றும் 11,500 மில்லிகிராம் ஐஸ் போதைப்பொருள் கைப்பற்றப்பட்டுள்ளது.
தெமட்டகொட பொலிஸ் நிலையப் பொறுப்பதிகாரி தலைமையில் 42 அதிகாரிகள் கொண்ட குழுவொன்று லக்ஹிரு செவன அடுக்குமாடி குடியிருப்பை சுற்றிவளைத்த போது சந்தேக நபர் கைது செய்யப்பட்டுள்ளார்.
No comments