மில்கோவின் தலைவராக ஜனக்க தர்மகீர்த்தி நியமனம்!!
மில்கோ கம்பனி லிமிடெட்டின் புதிய தலைவராக விவசாய அமைச்சின் செயலாளர் ஜனக்க தர்மகீர்த்தி நியமிக்கப்பட்டுள்ளார்.
விவசாய அமைச்சர் மஹிந்த அமரவீரவினால் இந்த நியமனம் வழங்கப்பட்டுள்ளது.
இதன்படி, விவசாய மற்றும் பெருந்தோட்ட கைத்தொழில் அமைச்சின் செயலாளர் பதவிக்கு மேலதிகமாக, அமைச்சர் ஜனக்க தர்மகீர்த்திக்கு இந்த தலைவர் பதவிக்கான கடமைகளையும் வழங்கியுள்ளார்.
புதிய தலைவரின் நியமனம் நேற்று முதல் அமுலுக்கு வருகிறது.
நிறுவனத்தின் ஊழியர்களின் அதிருப்தி அதிகரிப்பு மற்றும் மில்கோ நிறுவனத்தின் உற்பத்தித்திறன் குறைவடைந்துள்ளமை ஆகியவற்றை கருத்திற்கொண்டு இந்த நியமனம் வழங்கப்படுவதாகவும் புதிய தலைவரை நியமிக்கும் கடிதத்தில் அமைச்சர் குறிப்பிட்டுள்ளார்.
மில்கோ (பிரைவேட்) லிமிடெட் நிறுவனத்தை இந்திய நிறுவனத்திற்கு விற்கும் நடவடிக்கைக்கு எதிர்ப்பு தெரிவித்து மில்கோவின் முன்னாள் தலைவர் ரேணுகா பெரேரா தனது பதவியை இராஜினாமா செய்துள்ளார்.
No comments